Release Date : ௦7 அக்டோபர் 2௦25
குடும்பத்தினரை போனில் அழைத்து தேற்றிய விஜய்
கரூர்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அந்த கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
www.anandabhaskar.com