Release Date : 12 நவம்பர் 2௦25
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், செங்கம் வட்டக்கிளையின் சார்பாக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், செங்கம் வட்டக்கிளையின் சார்பாக செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் 11.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் வட்ட தலைவர் கே. எஸ். மோகன் அவர்களின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வட்டத் துணைத் தலைவர் கே. எம். சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.இணைச்செயலாளர் எஸ். பாண்டியன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வட்டச் செயலாளர் ஆர். பத்மநாபமூர்த்தி அவர்கள் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். கல்வியாளர் சி மாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆசிரியர் அர்ஜுனன், தலைமை ஆசிரியர் காமத், மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சுப்பிரமணியம், வ.வ. அ. (ஓய்வு) சட்டநாதன், ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் வீரபத்திரன் ஆகியோர் உரையாற்றினர்.மாவட்ட பொருளாளர் ஆனந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். வட்டப் பொருளாளர் சாதிக் பாஷா நன்றியுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர்.
www.anandabhaskar.com