Release Date : 11 நவம்பர் 2௦25
5அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆரணி சார் நிலை கருவூலம் எதிரில் வட்டத் தலைநகர் ஆர்பாட்டம்
ஆரணி வட்டக்கிளை தமிழ் நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக மாநில மைய முடிவின் படி 5அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆரணி சார் நிலை கருவூலம் எதிரில் வட்டத் தலைநகர் ஆர்பாட்டம் கிளைத் தலைவர் திரு. இரா.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கையை விளக்கி கிளை செயலாளர் திரு .அ.விருஷபதாஸ் உரையாற்றினார்.தோழமைச்சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டம் வெற்றி பெற வாழ்த்தி பேசினர். மாவட்ட துணைத் தலைவர் திரு.எல்.திருவேங்கடம் சிறப்புரை ஆற்றினார்.இறுதியாக கிளை. பொருளாளர் ஆ.சங்சர் நன்றி கூறினார்.
www.anandabhaskar.com