Release Date : ௦7 அக்டோபர் 2௦25
சுப்மன் கில்லுக்கு கேப்டன்சி கொடுத்தால் சும்மா இருப்பேன் என்று நினைக்காதீர்கள்.. ரோஹித் மெகா பிளான்
மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டது, கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், இந்த அரசியல் விளையாட்டுகளுக்கெல்லாம் அசராமல், ரோஹித் சர்மா தனது பேட்டால் பதிலடி கொடுக்க, அமைதியாக ஒரு மெகா திட்டத்தைத் தீட்டி, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சுப்மன் கில்லிடம் கேப்டன்சி சென்ற நிலையில், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க அவர் தயாராகி வருகிறார். கடந்த மாதம் துபாயில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நடந்து கொண்டிருந்தபோது, ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA - CoE) தனது பேட்டிங்கிற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். செப்டம்பர் 16-ம் தேதி முதல், கிட்டத்தட்ட ஒரு வாரம் பெங்களூருவில் தங்கியிருந்த ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்தப் பயிற்சி, சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் ஆடுகளச் சூழல் மற்றும் அங்குள்ள வேகப்பந்து வீச்சாளர்களை மனதில் வைத்து, அவரது வலைப்பயிற்சி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
www.anandabhaskar.com