Release Date : ௦2 நவம்பர் 2௦25
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 02.11.2025. (ஞாயிறு) காலை 11 மணிக்கு அரசு கலைக்கல்லூரி, சேலம் -7 எதிரே- காயத்ரி காம்ப்ளக்ஸில் உள்ள சேலம் டுடோரியலில் மாவட்டத் தலைவர் வெ. தமிழழகன் தலைமையில், செயலாளர் முனைவர் வே. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது. தாரை குமரவேலு சேலத்தின்சிறப்பு குறித்து உரையாற்றினார். கவிஞர்செ.சீ இளந்திரையன் மரபுக் கவிதைகளின் தோற்றம் குறித்து உரையாற்றினர். செல்வராஜா எழுதிய" இன்னும் ஓர் சுவை " சிறுகதை தொகுப்பினை முனைவர் வே.பெரியசாமி திறனாய்வு செய்தார். கூட்டத்தில் எழுத்தாளர்கள் சுபாகர், மனோரஞ்சிதம் பாபு, வின்சென்ட் செண்பகராஜ், பாரதி தமிழ்,அ.கார்த்திகேயன், சீனிவாசன், சேலம் டுடோரியல் முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.எழுத்தாளர்களின் படைப்புகளை நூலாக்கம் செய்வது, சங்க உறுப்பினர் சேர்க்கை போன்ற பல விதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இறுதியில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
www.anandabhaskar.com