Release Date : ௦1 நவம்பர் 2௦25
உலக அமைதிக்கான சர்வ சமய பிரார்த்தனை
மதுரை பல் சமய நட்புறவு வளர்ச்சி மையம், சேவாலயம் மாணவர் இல்லம் இணைந்து நடத்திய உலக அமைதிக்கான சர்வ சமய பிரார்த்தனை 31.10. 2025 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெற்றது திரு சி தேவதாஸ் காந்தி தலைமை வகித்து அனைத்து சமய பாடல்கள் பாடப்பட்டன,மற்றும் இந்து சமயம், கிறிஸ்தவ சமயம், இஸ்லாம் சமயம், புத்த சமயம், சமண சமயம், சீக்கிய சமயம், பகாய் சமயம், காந்திய, திருமுறைகளில் இருந்து வாசிப்பு நிகழ்ந்தது, அருள் செய்தி கவிஞர் இரா ரவி தமிழ் செம்மல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மேம்பாட்டு மேம்படுத்துவதும் பற்றியும், காந்திய சிந்தனை அனைத்து சமய ஒற்றுமை அகிம்சை சத்தியாகிரகம் காந்தியுடைய சர்வோதயம் ஆகிய கருத்துக்களை மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் பற்றியும், பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு தேவையான உழைப்பு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதனை பற்றியும் மாணவர்கள் கல்வியில் சிறந்து வளர்ச்சி பெற பல்வேறு வழிமுறைகளை வழங்கி சிறப்பு செய்திகள் தெரிவித்தார். பிரார்த்தனையில் திரு. பரமானந்தம்,எர்னஸ்ட் ,முனைவர் ஆ. ரவிச்சந்திரன், முனைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்
www.anandabhaskar.com