Release Date : 31 அக்டோபர் 2௦25
சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாள்* திசையன்விளையில் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு
திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பாக, இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் டி. லில்லி அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ். பலவேசகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் தணிகை செல்வி, வணிகவியல் துறை தலைவர் ஒயிட்டன் சகாயராஜ், பேராசிரியர்கள் சண்முகம், சுப்பிரமணியன், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் விஜய், சிவ, கவுசல்யா, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாணவ–மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று நாட்டின் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் தேசப்பற்று குறித்த உறுதிமொழி எடுத்தனர்.நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கிடையே வினாடி வினா போட்டி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி தேசப்பற்று உணர்வை ஊட்டும் வகையில் வெகு சிறப்பாகவும் ஒற்றுமையுடன் நடைபெற்றது.
www.anandabhaskar.com