Release Date : ௦7 அக்டோபர் 2௦25
பயன்பாட்டிற்கு வந்தது கரூர் புதிய பேருந்து நிலையம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!
கரூர்: கரூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து, புறநகர் பேருந்துகளின் இயக்கம் தொடங்கியது.கரூர் மாநகராட்சி சார்பில் ரூ.40 கோடி மதிப்பீட்டில், 12.14 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தை ஜூலை 9ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், பயன்பாட்டிற்கு வந்துள்ளது.பயன்பாட்டிற்கு வந்தது கரூர் புதிய பேருந்து நிலையம்பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில நாட்களாக கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்தில், அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் விடுதல் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் மாநகராட்சி சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது.இது தவிர புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, அனைத்து தமிழக அரசு போக்குவரத்து கழக மண்டலங்களுக்கு கரூர் மாநகராட்சி சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.சிறப்பு வசதிகள்கரூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கரூர் மண்டல நேர காப்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கரூர் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் வசதிக்காக உணவு விடுதி, தேநீர் கடைகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்து நிலையத்திற்கு வெளியே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்டவைகள் இன்று (அக்.7) முதல் செயல்படத் தொடங்கின.24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு, பேருந்து வசதிபுதிய பேருந்து நிலையத்தில் தான்தோன்றிமலை, பசுபதிபாளையம் காவல்துறை சார்பில், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விரைவில் பேருந்து நிலைய வளாகத்தில் புறக்காவல் நிலையம் ஒன்று செயல்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்களின் வசதிக்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், புதிய பேருந்து நிலையத்தில் அதற்குரிய பயணக் கட்டணங்கள் அரசாணையின்படி வசூலிக்கப்படும் எனவும் கரூர் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா தெரிவித்தார். அப்போது, கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், போக்குவரத்து துறை பொதுமண்டல மேலாளர் சதீஷ்குமார், உதவி பொறியாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கிய புதிய பேருந்தின் கட்டுமானப் பணிகள், பல்வேறு தடங்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு காரணமாக முடங்கியது. வழக்குகள் முடிந்த நிலையில், கரூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் கரூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
www.anandabhaskar.com