சேலம், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், 52 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுாற்பு மற்றும் முறுக்கேற்றும் அலகுகளில், உற்பத்தி பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
சேலம் அணைமேடு அருகே உள்ள, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், 2024ல் சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 52.52 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக இரண்டு பட்டு நுாற்பு மற்றும் 1 முருக்கேற்றும் அலகு என மொத்தம், 3 அலகுகளில் உற்பத்தி பணிகளை, நேற்று பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் சாந்தி துவக்கி வைத்தார்.
புதிய அலகுகளில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த, 40 பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசின் நிதியின் கீழ், 1.50 லட்சத்தில் நுாற்பு அலகுக்கு தேவையான எரி பொருள் சேமிப்பு கட்டடம், 3.25 லட்சத்தில் மின் மராமத்து பணிகள், 5.61 லட்சத்தில் நீர் வடிகால் அமைப்பு ஆகியவையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சித்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன், உதவி இயக்குனர் பொன்மாரி, பட்டு ஆய்வாளர் சோழன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 1௦ அக்டோபர் 2௦25

Write your opinion