வேலூர், நவ. 7-
வேலூர் பாலார் சிட்டி லயன்ஸ் கிளப் மற்றும் வேலூர் சி.எம்.சி., கண் மருத்துவமனையும் இணைந்து இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாமை நடத்தின. வேலூர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ள தேவி கருமாரி அம்மன் ஆலய வளாகத்தில் இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த கண் சிகிச்சை முகாமுக்கு தலைவர் லயன் மணி தலைமை வகித்தார். லயன் வெங்கடேசன், செயலாளர் மற்றும் லயன் ஜீவானந்தன், பொருளாளர். லயன் ராஜூ, லயன் புருஷோத்தமன், வட்டார தலைவர், லயன் ரவி, மண்டல தலைவர் மற்றும் ஆற்றல்மிகு அரிமா சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. அறுவை சிகிச்சை செய்ய தேவையான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் அறுவை சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் இலவசமாக செய்து தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦6 நவம்பர் 2௦25

Write your opinion