டெல்லி கிரிக்கெட்டில் சர்ச்சைகள் என்பது இன்று நேற்று அல்ல காலம் காலமாக நடந்து வரும் ஒரு விஷயமாகும். சேவாக், கம்பீர், விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட ஜாம்பவான்களை உருவாக்கிய டெல்லி கிரிக்கெட்டில் பல விரும்பத்தகாத செயல்களும் நடந்து வருகிறது. ஒரு முறை பிரபல வீரர் ஒருவரே டெல்லி அணியில் சேர வேண்டும் என்றால் பணம் அதிகமாக தரப்பட வேண்டும் என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருந்தார். இந்த நிலையில் நாடு தழுவிய அண்டர் 19 ஒரு நாள் கிரிக்கெட் தொடரான வினோ மான்காட் கோப்பை அக்டோபர் 9ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த தொடரில் டெல்லி அணி 23 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் அபி ராஜ் காஹான் என்ற விக்கெட் கீப்பர் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்திற்கு தேர்வான வீரர் தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ள அந்த வீரர் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட விக்கெட் கீப்பிங் பணியை செய்ததே கிடையாது. சீனியர் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் முதலில் அண்டர் 19 இடம்பெற வேண்டும் என டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களில் இது தொடர்பான செய்தி வெளியானதை அடுத்து, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் ரோகன் ஜெட்லி தற்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார். சர்ச்சைக்குள்ளான வீரரை நீக்கிவிட்டு விக்கெட் கீப்பிங் செய்யும் இரண்டாவது வீரரை அணியில் அவர் சேர்த்திருக்கிறார். தற்போது இந்த அணி ராஞ்சிக்கு புறப்பட்டு சென்று விட்டதாகவும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் டெல்லி அணி இந்த தொடரில் விளையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து டெல்லி அண்டர் 19 அணியில் இடம் பெற்றிருந்த மேலும் இரண்டு வீரர் அணியை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒரு வீரர் தேவையான சான்றிதழை கொடுக்கவில்லை என்றும் மற்றொரு வீரர் ஏன் நீக்கப்பட்டார் என்ற காரணமும் சொல்லப்படவில்லை.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦7 அக்டோபர் 2௦25

Write your opinion