புதன், 12 நவம்பர் 2௦25
AnandaBhaskar.com

IND vs PAK: அம்பயர் மேல் பழியை போடுறீங்களா? பாகிஸ்தான் வாயை அடைத்த எம்சிசி.. முனீபா ரன் அவுட் ஏன்?

anandabhaskar
anandabhaskar
Date : ௦7 அக்டோபர் 2௦25 | Print View

IND vs PAK: அம்பயர் மேல் பழியை போடுறீங்களா? பாகிஸ்தான் வாயை அடைத்த எம்சிசி.. முனீபா ரன் அவுட் ஏன்?

கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2025 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை முனீபா அலி ரன்-அவுட் செய்யப்பட்டது, பாகிஸ்தான் ரசிகர்களிடையேயும், முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிருப்தியை கிளப்பியது. மூன்றாவது நடுவர் தனது முடிவை மாற்றியது அநீதி என்று பாகிஸ்தான் தரப்பு வாதிட்டு வந்த நிலையில், கிரிக்கெட்டின் சட்டத்தை உருவாக்கும் உச்சபட்ச அமைப்பான மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC), இந்தச் சர்ச்சைக்கு ஒரு அதிரடி அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாகிஸ்தானின் வாதங்களை முற்றிலுமாக நிராகரித்த MCC, முனீபா அலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது 100% சரியானது என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடந்த இந்தச் சர்ச்சை குறித்து மௌனம் கலைத்துள்ள எம்சிசி, முனீபா அலியின் அவுட் குறித்து எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் தரப்பு முன்வைத்த வாதங்கள் ஏன் தவறானவை என்பதையும் இரண்டு முக்கிய அம்சங்களில் விளக்கியுள்ளது. 1. பந்து 'டெட் பால்' ஆகவில்லை! நான்காவது ஓவரின் கடைசிப் பந்தில் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்யப்பட்டதால், பந்து 'டெட் பால்' ஆகிவிட்டது, அதன் பிறகு ரன்-அவுட் செய்தது செல்லாது என்று ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. இதை MCC முற்றிலுமாக மறுத்துள்ளது. "எல்.பி.டபிள்யூ-க்கு அவுட் கேட்டு அப்பீல் செய்யப்பட்டதால் மட்டுமே பந்து 'டெட் பால்' ஆகிவிடாது. கள நடுவர் 'நாட்-அவுட்' என்று தனது தீர்ப்பை வழங்கிவிட்டார். பந்து விக்கெட் கீப்பரின் கைகளில் முழுமையாகச் செட்டில் ஆகவில்லை. மேலும், தீப்தி ஷர்மா பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி எறிந்ததே, வீரர்கள் பந்தை 'டெட் பால்' ஆகக் கருதவில்லை என்பதற்கான ஆதாரம். எனவே, பந்து ஆட்டத்தில் உயிர்ப்புடன் தான் இருந்தது," என்று எம்சிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2. 'பவுன்சிங் பேட்' விதி முனீபாவுக்குப் பொருந்தாது! பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் சில விமர்சகர்கள், "ஒருமுறை பேட்டை க்ரீஸுக்குள் ஊன்றிவிட்டால், அதன் பிறகு பேட் காற்றில் இருந்தாலும் அது நாட்-அவுட்" என்ற விதியைச் சுட்டிக்காட்டினர். ஆனால், அந்த விதி யாருக்குப் பொருந்தும் என்பதை எம்சிசி தெளிவாக விளக்கி, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது. "இந்த விதி, 'பவுன்சிங் பேட் விதி' (Bouncing Bat Law) என்று அழைக்கப்படுகிறது. இது, ஒரு பேட்ஸ்மேன் க்ரீஸை நோக்கி வேகமாக ஓடி வரும்போதோ அல்லது டைவ் அடிக்கும்போதோ, அவரது பேட் கிரீஸுக்குள் தரையில் பட்டு, வேகத்தின் காரணமாகக் காற்றில் மேலே எழுந்தால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது." "ஆனால், முனீபாவின் விஷயத்தில் இது பொருந்தாது. ஏனென்றால், அவர் க்ரீஸை நோக்கி ஓடி வரவில்லை. அவர் ஓட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், சாதாரணமாக நின்றுகொண்டிருந்தபோது, தனது பேட்டை காற்றில் தூக்கினார். இந்த விதி, அடுத்த ரன்னுக்காகத் திரும்புபவர்களுக்கோ, தடுமாறுபவர்களுக்கோ அல்லது முனீபா போல சாதாரணமாக பேட்டைத் தூக்குபவர்களுக்கோ பாதுகாப்பு அளிக்காது. எனவே, மூன்றாவது நடுவர் 'அவுட்' கொடுத்தது முற்றிலும் சரியானது" என்று எம்சிசி தனது அறிக்கையில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவிடம் 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த சோகத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு, கிரிக்கெட்டின் சட்ட அமைப்பான எம்சிசி-யே தங்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்திருப்பது, பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை மூலம், முனீபா அலியின் அவுட் குறித்த அனைத்து விவாதங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Write your opinion

AnandaBhaskar.com

புதன், 12 நவம்பர் 2௦25

IND vs PAK: அம்பயர் மேல் பழியை போடுறீங்களா? பாகிஸ்தான் வாயை அடைத்த எம்சிசி.. முனீபா ரன் அவுட் ஏன்?

ரிலீஸ் வயர் : ௦7 அக்டோபர் 2௦25

featured Image

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com