திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணியாற்றி, பணி நிறைவு செய்தவர் முனைவர் ஆ. சந்திரபுஷ்பம். கிராமியப் பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற இவர், கிராமியப் பாடல்களைத் தனதி இனிய குரலுடன் சிறப்பாகப் பாடக்கூடிய திறன் பெற்றவர். இவரது பாடல்கள் யூடியூப் எனும் வலையொளியில் கிராமத்துக்குயில் எனும் பெயரில் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன. அண்மையில் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்நிலையில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி, பொருநை இலக்கியம் மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தின் நிறுவனரும், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு என்று இருவரும் கலைமாமணி விருது பெற்ற முனைவர் ஆ. சந்திரபுஷ்பத்தைப் பயனாடை அணிவித்து, சேலை ஒன்றைப் பரிசாக அளித்துப் பாராட்டினர்.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 24 அக்டோபர் 2௦25

Write your opinion