தஞ்சாவூர்: விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தவச்செல்வன். இவருடைய மகள் யாழினி (வயது 19) கல்லூரியில் பயின்று வருகிறார். சிறுவயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட யாழினி, கடந்த 8 ஆண்டுகளாக தனது தந்தையுடன் சேர்ந்து பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
இப்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி சுற்றுச்சூழல் அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் யாழினி. இவர் கடந்த 8 ஆண்டுகளில் பூங்காறு, கருப்பு கவுனி, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா சிவன் சம்பா, சீரக சம்பா, குழியடிச்சான் போன்ற 21 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை தனது நிலத்தில் பயிரிட்டுள்ளார்.
இந்த ஆண்டு யாழினி தனது தந்தையுடன் சேர்ந்து 2 ஏக்கரில் ரத்தசாலி என்ற பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார். 110 முதல் 120 நாட்களில் சாகுபடிக்கு தயாராகிற இந்த நெற்பயிரானது குட்டை ரகத்தைச் சேர்ந்தது. அடை மழை காலத்திலும் இந்த நெல் ரக கதிர்கள் நிலத்தில் சாயாமல் நிற்கும் தன்மை கொண்டது.
யாழினி தனது நிலத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றாக, மண்புழு உரம், மாட்டு சாணம், பஞ்ச காவியம், எள் புண்ணாக்கு, தயிர் என இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார்.
யாழினியின் வயலில் தற்போது ரத்தசாலி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஏக்கருக்கு 24 மூட்டைகள் வரை நெல் கிடைத்து வருவதாக கூறுகிறார் யாழினி. இந்த நெல் ரகங்கள் அறுவடை முடிந்த கையோடு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. ரத்தசாலி அரிசியானது இப்போது ஒரு கிலோ ரூ. 160 என சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து விவசாயி தவச்செல்வன் கூறுகையில், “இதுவரை 21 பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்துள்ளோம். இப்போது சம்பா பருவத்தில் சிவன் சம்பா, கருப்பு கவுனி , தூயமல்லி, சீரக சம்பா, குழியடிச்சான் உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ளேன். மைசூர் மல்லி, ரத்தசாலி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு ரத்தசாலி நெல் ரகத்தை அறுவடை செய்து வருகிறேன். இது ஏக்கருக்கு 18 முதல் 24 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்து வருகிறது” என்றார்.
தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்வது குறித்து மாணவி யாழினி கூறுகையில், “ரத்தசாலி ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இது அதன் சிவப்பு நிறத்திற்காகவும், ரத்த சுழற்சி மற்றும் சுத்திகரிப்புக்கு உதவுவதாலும் ரத்தசாலி என்று அழைக்கப்படுகிறது.
இந்த நெற்பயிரானது வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரை தாங்கி நிற்கக்கூடியது. மற்ற ரகங்களை விட மகசூல் குறைவாக இருந்தாலும் விலை அதிகம். ரத்த சோகை உடையவர்கள் இந்த ரக அரிசியை சாப்பிடலாம் என்பதால் ரத்தசாலி நெல்லுக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது” என்றார்.
இயற்கை உரத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர் விளக்குகையில், “ரசாயன உரத்தை பயன்படுத்துவதால் அது நமக்கு என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பது நமக்கு தெரியும். எனவே இயற்கை முறையில் உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லாத உணவை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதனை சாகுபடி செய்து வருகிறேன். நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வழியில் பயணம் செய்ய உள்ளேன்” என்று கூறினார்.

வியாழன், 13 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦7 அக்டோபர் 2௦25

Write your opinion