கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர்,காரப்பட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். *செய்தி தகவல்:சிவசக்தி ஊத்தங்கரை*